Neyveli township times

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி

291

கடலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. கொரோனாவால் 44 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 கைதிகள், தஞ்சாவூரில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு வந்த செவிலியர்

சேலத்தில் மற்றும் சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த 2 பேர், துபாய் நாட்டில் இருந்து மங்களூர் வந்த ஒருவர், நல்லூரை சேர்ந்த கர்ப்பிணி, நோய் தொற்று காரணமாக சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மங்களூர், புவனகிரி, பண்ருட்டி, கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த 14 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இது தவிர கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த 23 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

- Advertisement -

Rail booking now at Block-16 Post office

இந்த நிலையில் நேற்று விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலம் காந்திநகரை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது கூலி தொழிலாளி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

1203total visits,5visits today

Leave A Reply

Your email address will not be published.