Neyveli township times

கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை

142

கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.

கொரனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்.

Rail booking now at Block-16 Post office

- Advertisement -

நோயில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு முறை கொரோனா இருக்கிறதா என்று பரிசோதனை, பிறகு எலிசா சோதனை ஆகியவை நடத்தப்பட்ட பிறகும், அவரது ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டபிறகே கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்.

இதற்கான சோதனைமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இது முடிந்து இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன் பின்னர் மருத்துவமனைகளில் இது சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வரும் என சென்னையில் இருக்கும்  தேசிய தொற்றுநோய் தடுப்பு கழக இயக்குநர் மனோஜ் முர்கேகர் தெரிவித்துள்ளார்.சிகிச்சையை பின்பற்றி சீனாவில் தீவிர கொரோனா நோயாளிகள் 10 பேருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கும் முறை மிக விரைவில் தொடங்குகிறது. இதற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் எந்த நேரத்திலும் வழங்குவார் என கூறப்படுகிறது.

கேரளாவில் ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் 4 மருத்துவக்கல்லூரிகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

303total visits,2visits today

Leave A Reply

Your email address will not be published.