Neyveli township times

தமிழகத்தில் 711 பகுதிகள் கன்டெய்ன்மென்ட் மண்டலங்களாக அறிவிப்பு.. கடலூர் மாவட்டத்தில் எவை எவை.

34
தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்யவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2-ந்தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக எத்தனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன? என்ற அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மட்டும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாவட்டங்கள் வாரியாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான விவரங்களையும், அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி விருத்தாச்சலம் சிதம்பரம் நெல்லிக்குப்பம் கட்டுமன்னார்குடி லால்பேட்டை பரங்கிப்பேட்டை வடலூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Rail booking now at Block-16 Post office

- Advertisement -

281total visits,4visits today

Leave A Reply

Your email address will not be published.