சூர்யாவுக்காக பாடிய செந்தில் கணேஷ்!

One india: சிவா கார்த்திகேயன், பிரபுதேவா அடுத்து சூர்யாவிற்காக பாடும் செந்தில் கணேசன்

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு பாடியுள்ளார் செந்தில் கணேஷ். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷின் காட்டில் அடைழை என்று சொல்லலாம். சிவகார்த்திகேயன், பிரபுதேவாவைத் தொடர்ந்து இப்போது நடிகர் சூர்யாவுக்கும் ஒரு பாடல் பாடிவிட்டார்.

மக்கள் இசைப்பாடகரான செந்தில் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 6 போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லம் தேடி வருகின்றன. போட்டியின் வெற்றியாளருக்கு ஏஆர்.ரகுமானின் இசையில் பாடும் வாய்ப்பு உறுதியான நிலையில், போட்டி முடிந்த உடனே இமானிடமிருந்து அறிவிப்பு வந்தது. டி.இமானின் இசையில் சிவகார்த்திக்கேயனுக்காக முதல்பாடலை பாடினார். பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதல் டூயட் பாடலை பிரபுதேவா நடிக்கும் சார்ளி சாப்ளின் திரைப்படத்தில் பாடினர். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்தில் சூர்யாவின் ஓபனிங் பாடலை ஹரிஸ் ஜெயராஜின் இசையில் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மான் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2246total visits,3visits today

Comments (0)
Add Comment