மேட்டுப்பாளையத்தில் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த 17 பேர் பலி வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையம்: வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த 17 பேர் பலி , இதன் காரணமாக 20 அடி உயர காம்பவுண்ட் சுவர் கட்டிய வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களை போலவே மேட்டுப்பாளையத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிகாலை வரை 18 செமீ அளவுக்கு நல்ல மழை பெய்தது. இதனால், பல வீடுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஏடி காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. இதில், இங்குள்ள சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் கருங்கல் சுற்றுச்சுவரானது, விடிகாலை 4.15 மணிக்கு இடிந்து , பக்கத்தில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.

 

அந்த வீடுகள் எல்லாமே ஓட்டு வீடுகள்தான்.. கருங்கல் சுவர் விழுந்ததுமே அந்த வீடுகள் நொறுங்கி விழுந்தன. அதனால் உள்ளே தூங்கி கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கினர்.. அப்படியே வீடுகளுக்குள்ளேயே புதைந்தும் உயிரிழந்தனர். 4 வீடுகளுமே மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது

விடிகாலை நேரத்தில், கனத்த மழை பெய்யும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கிருந்தவர்களுக்குகூட தெரியவில்லை. விடிந்தபிறகுதான் அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ந்துபோயினர்.. மீட்பு பணிகள் ஆரம்பமானது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். சிறுவர், சிறுமியர், 10 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இதில், ஆனந்த்குமார், நதியா, அக்‌ஷயா, லோகுராம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

3657total visits,4visits today

Comments (0)
Add Comment