Neyveli township times

நெய்வேலியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து 8 பேர் காயம்

107

நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்தில் 7 யூனிட் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை  மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 6-வது யூனிட் -ல் உள்ள பாய்லரில்  ஏற்பட்ட உயரழுத்தம் காரணமாக அந்தபாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவ தும் புகை மண்டலமாக காட்சி யளித்தது.

8 பேர் காயம்

இதற்கிடையே பாய்லரில் இருந்த நீராவி சிதறியதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன் பாலமுருகன் ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்த என்.எல்.சி. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் விரைந்து வந்து காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக என்.எல்.சி. மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

- Advertisement -

Rail booking now at Block-16 Post office

இதுபற்றி அறிந்த என்.எல்.சி. மனித வளத்துறை இயக்குனர் விக்ரமன், மின்துறை இயக்குனர் ஷாஜி ஜான் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

காய மடைந்த தொழிலாளர் களுக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் பாய்லர்  வெடித்த இடத்தில் ஏற்பட்ட தீயை  என்.எல்.சி. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

497total visits,4visits today

Leave A Reply

Your email address will not be published.