Neyveli township times

19.06.2020 – கடலூரில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா –

42
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவு துணை இயக்குனரான சுமார் 50 வயதான டாக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த நபருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
கடலூரை சேர்ந்த 4 செவிலியர்களுக்கும், சென்னையில் இருந்து கடலூர் வந்த 50 பேருக்கும், செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 20 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர், ஒடிசாவில் இருந்து வந்த 6 பேர், கேரளா, கர்நாடகா, டெல்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Rail booking now at Block-16 Post office

- Advertisement -

மேலும் ஒரத்தூர், புவனகிரியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதில் பண்ருட்டியை சேர்ந்த நபர், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உமிழ்நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

950total visits,1visits today

Leave A Reply

Your email address will not be published.